சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கை எரித்தவர் கைது

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : பைக்கை எரித்த நபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி, ராஜாம்பாள் நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் ராஜகோபால், 38; இவரது மனைவி இந்துமதி, 36; இவர், முகக் கவசம், பாதுகாப்பு உடை தைக்கும் கடை வைத்துள்ளார்.

இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2016ம் ஆண்டு கோர்ட் மூலம் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.இந்நிலையில் கடந்த 16ம் தேதி இந்துமதி கடைக்கு வந்த ராஜகோபால் அங்கு நின்று கொண்டிருந்த யமகா பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தட்டிக்கேட்ட இந்துமதியை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, ராஜகோபாலை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X