சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணியாததால்தொற்று பரவும் அபாயம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பணிபுரிவோர் முகக் கவசம் அணியாமல் இருப்பதால் பணி புரிவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

சங்கராபுரத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என போலீசார் எச்சரித்தும் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமல் வருகின்றனர்.நகரில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பணிபுரியும் பணியாளர்கள் முகக் கவசம் அணியாமல் உள்ளனர். பெட்ரோல் பங்க்குகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் பெட்ரோல் போட வருகின்றனர்.அப்படி வருபவர்களுக்கு தொற்று பரவி அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே, நகரில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X