பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : அனைத்து வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், மளிகை பிரிவு ராஜேந்திரன், நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். குசேலன் வரவேற்றார். ஜவார்தனசிங், சர்புதீன், ஜவுளி பிரிவு சீனிவாசன், தயானந்தன், அசோக்குமார், கிருஷ்ணமுர்த்தி, அப்துல் ரகீம் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சங்கராபுரம் பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் நலன் கருதி நகரில் இன்று 18ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை மாலை 3:00 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து வைப்பது. ஓட்டல், பழக்கடைகள் மாலை 6:00 மணி வரை திறந்து வைப்பது.கடைகளில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவது. கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்களை சமூக இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்துவது. அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது காவல் துறை மற்றும் வருவாய்த் துறை எடுக்கும் நடவடிக்கையில் சங்கம் தலையிடாது.
இது குறித்து நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் துண்டு பிரசுரம் முலம் தெரியப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X