பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவர்களிடம் அபராதம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி பகுதியில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களிடம் நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கும் பணி கடந்த ஏப்ரல் 28ம் தேதி துவங்கியது. கலெக்டர் கிரண் குராலா உத்தரவின் பேரில், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.நகரில் கடந்த 40 நாட்களாக 1,293 பேரிடமிருந்து 2 லட்சத்து 58 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் மீண்டும் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நகராட்சி பணியாளர்கள் அபராதம் விதிக்கும் பணிகளை துவங்கினர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பரிமளா தலைமையில் பரப்புரையாளர்கள் அகிலா, பாரதலட்சுமி, மணிமேகலை, சோபா உள்ளிட்டோர், முகக் கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலித்தனர். இப்பணிகளை சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X