12வது நாளாக விலை உயர்வு: பெட்ரோல் ரூ.81.32; டீசல் ரூ.74.23| Petrol, diesel price continue to rise | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12வது நாளாக விலை உயர்வு: பெட்ரோல் ரூ.81.32; டீசல் ரூ.74.23

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (3)
Share
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, Indian oil corporation, petrol, diesel, Tamil Nadu, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: ஒரு மாதத்திற்கு பின், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று (ஜூன் 18), 12வது நாளாக விலை அதிகரித்து, பெட்ரோல் லிட்டருக்கு 81.32 ரூபாய், டீசல் லிட்டருக்கு 74.23 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் இம்மாதம் 7ம் தேதி முதல் தினமும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


தமிழகத்தில் நேற்று, லிட்டர் பெட்ரோல் 80.86 ரூபாய்க்கும்; டீசல் 73.69 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று, லிட்டர் பெட்ரோல் 46 காசுகள் உயர்ந்து 81.32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 54 காசுகள் அதிகரித்து 74.23 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கடந்த 12 நாட்களில், பெட்ரோல் லிட்டருக்கு 5.78 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 6.01 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X