பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இழப்பீடு; பில்லூர் குடிநீர் திட்ட கூட்டத்தில் கலெக்டர் உறுதி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம் : பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, கருத்துக்கேட்பு கூட்டம், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது.

கோவை மாநகராட்சிக்கு பில்லூர் 1, 2, சிறுவாணி, ஆழியாறு, வடவள்ளி கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து, ஐந்து குடிநீர் திட்டங்கள் வாயிலாக தண்ணீர் எடுக்கப்படுகிறது.எதிர்கால மக்கள் தொகை அதிகரிப்பு அடுத்து, மேட்டுப்பாளையம் சமயபுரம் அருகே பவானி ஆற்றில் இருந்து, 978. 61 கோடி ரூபாயில், பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்துக்கு, தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதில் மேட்டுப்பாளையம் தாலுகாவில் தேக்கம்பட்டி, மருதூர் ஆகிய ஊராட்சிகளிலும், கோவை வடக்கு தாலுகாவில் நாய்க்கன்பாளையம், கூடலூர் வடக்கு, தெற்கு, நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம், பன்னீர் மடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில், குடிநீர் குழாய் பதிக்கவும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், 159 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது.

தேக்கம்பட்டி, மருதுார் ஆகிய ஊராட்சிகளில், 224 விவசாயிகளிடமிருந்து, 97.6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது சம்பந்தமாக மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே, நில உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.இதற்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விவசாயிகள், அரசின் நில மதிப்பீடு தொகைக்கு பதிலாக, தற்போதுள்ள மார்க்கெட் விலைக்கு நிலம் கையகப்படுத்தி வழங்க வேண்டு மென வலியுறுத்தி பேசினர்.இறுதியில் கலெக்டர் ராஜாமணி பேசுகையில், "விவசாயம் செய்யும் நிலம், தரிசு, சைட்டுகள் என மூன்று வகையாக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்ட பிறகு, விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்காத வகையில், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்," என்றார்.கூட்டத்தில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சுரேஷ், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் விவேகானந்தன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேல், எம்.எல்.ஏ., சின்னராஜ், 23 கிராம விவசாயிகள் சங்க தலைவர் பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X