கை காட்டினால் சுத்தம் பன்னிமடையில் அபாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கை காட்டினால் 'சுத்தம்' பன்னிமடையில் அபாரம்

Added : ஜூன் 18, 2020
Share

பெ.நா.பாளையம் : பன்னிமடை ஊராட்சியில், வைரஸ் பரவலைத் தடுக்க, தானியங்கி கிருமி நாசினி கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, உள்ளாட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பன்னிமடை ஊராட்சி அலுவலக நுழைவு வாயில் அருகே, தானியங்கி கிருமி நாசினி கருவி பொருத்தப்பட்டுள்ளது.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'அலுவலகத்துக்குள் நுழையும் நபர்கள், இக்கருவியின் கீழ் பகுதியில், கையை காட்டினால் மட்டும் போதும். கிருமி நாசினி திரவம் கைகளில் விழும். பின், கைகளை துடைத்துக் கொண்டு உள்ளே செல்லலாம்.கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ள பாட்டில்களை தொடுவதால், வைரஸ் கிருமி பரவும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கவே, இந்த தானியங்கி கிருமி நாசினி கருவி அமைக்கப்பட்டுள்ளது.முகக்கவசம் அணிந்து வரும் நபர்கள் மட்டுமே, அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அலுவலகத்தில், சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X