சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீன கொடியை கிழித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சீன கொடியை கிழித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கோவை : ராணுவ வீரர்கள் உயிரிழக்க காரணமான சீன அரசை கண்டித்து, பா.ஜ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய- -- சீனா எல்லையில், நேற்று முன்தினம் நடந்த மோதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேற்று கோவையில் உள்ள பா.ஜ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், சீன நாட்டு வரைபடம் மற்றும் கொடி கிழிக்கப்பட்டது. சீன தயாரிப்பான மொபைல்போனை உடைத்து, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.

இதேபோல், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு, இந்து மக்கள் கட்சி சார்பில், சீன அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீன ராணுவத்தினரை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. சீன கொடியை எரிக்க முயற்சி செய்த போது, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202006:40:42 IST Report Abuse
Muguntharajan சீனா பிரச்சனை செய்வதற்கு நமது தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஏன் போராட்டம்? தாசில்தாரா நடவடிக்கை எடுக்க முடியும்? சீன தூதரகம் முன் போராட்டம் நடத்த வேண்டும். தூதரக அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X