கோவையில் நீதிமன்றங்களை  திறக்க வக்கீல்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் நீதிமன்றங்களை  திறக்க வக்கீல்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 18, 2020
Share

கோவை : கோவையில் நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்று, வக்கீல்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில், நீதிமன்றங்களில் விசாரணை துவக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூர், நீலகிரி, கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட, 19 மாவட்டங்களில், நேற்று முதல் நீதிமன்றங்களில் வழக்கம் போல விசாரணை நடந்து வருகிறது.ஆனால், கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களை திறக்க, உத்தரவு பிறப்பிக்கப்படாததால், வக்கீல்கள் ஏமாற்றமடைந்தனர். நீதிமன்றங்களை திறப்பது தொடர்பாக, கோவை வக்கீல் சங்கம் சார்பில் மாவட்ட நீதிபதியை சந்தித்து முறையிட, வக்கீல்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X