சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வழக்கு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கோவை : ஊரடங்கின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, இந்து ஜனநாயக முன்னணியினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவில்களை திறக்க, நான்கு கால பூஜைகள் செய்து, யாகம் நடத்த வலியுறுத்தி, இந்து ஜனநாயக முன்னணியினர், கோவை டவுன்ஹாலில் உள்ள கோனியம்மன் கோவில் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஊரடங்கின் போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, இந்து ஜனநாயக முன்னணியின், மூன்று பெண்கள் உட்பட, 40 பேர் மீது தொற்றுநோய் பரப்புதல் சட்டத்தின் கீழ், செல்வபுரம், உக்கடம், பெரிய கடைவீதி, வெரைட்டிஹால் ரோடு உட்பட, ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மீதும், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X