சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, கொள்ளை முயற்சி ரவுடி குண்டாசில் கைது 

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கோவை : கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய நபரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் செந்தில், 42. கடந்த மாதம், 30ம் தேதி மணியகாரன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பெட்டிக்கடை நடத்தி வரும் தனசேகரன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி, 1,000 ரூபாயை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், செந்திலை கைது செய்த சரவணம்பட்டி போலீசார், சிறையில் அடைத்தனர்.

போலீசார் விசாரணையில் அவருக்கு ஏற்கனவே நான்கு கொலை மற்றும் இரு கொலை முயற்சி வழக்குகளில், தொடர்பு இருப்பது தெரிந்தது.இவர் மீது ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில், குற்றப்பதிவேடு பராமரிக்கப்பட்டு வருவதும் தெரிந்தது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டது.இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், செந்திலை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். சிறையில் உள்ள அவரிடம், இது குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X