பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்த முடியலீங்க; வாடிக்கையாளர்கள் தவிப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

அன்னுார் : மின் கட்டணம் செலுத்த முடியாமல், கரியாம்பாளையம் பகுதி மக்கள் தவிக்கின்றனர்.

கரியாம்பாளையத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட ஊர் வாடிக்கையாளர்கள், மின் கட்டணம் செலுத்துவது வழக்கம்.கடந்த 4 நாட்களாக இங்கு சர்வர் இணைப்பு இல்லை என்று கூறி, மின் கட்டணம் செலுத்த வருபவர்களை, திருப்பி அனுப்புகின்றனர். இதனால் நான்கு கி.மீ., தொலைவிலுள்ள, அன்னுார் அல்லது பத்து கி.மீ., தொலைவிலுள்ள, கோவில்பாளையம் சென்று மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

'தனியார் பிரவுசிங் சென்டரில், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, கரியாம்பாளையத்தில் மின் கட்டணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் தெரிவித்தனர்.கரியாம்பாளையம் மின்வாரிய உதவி பொறியாளர் கூறுகையில், 'திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக குழி தோண்டும்போது, பி.எஸ்.என்.எல்., கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் இங்கு பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெற்ற, இணைய இணைப்புகள் முடங்கி உள்ளன. இன்று சரி செய்து விடுவதாக, பி.எஸ்.என்.எல்,, நிறுவனத்தினர் கூறி உள்ளனர். எனவே விரைவில் இங்கே மின் கட்டணம் செலுத்தலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X