சிகிச்சை பலனில்லாமல் சிறுத்தை மரணம்; தோட்டத்து சுருக்கு கம்பிகளால் பரிதாபம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிகிச்சை பலனில்லாமல் சிறுத்தை மரணம்; தோட்டத்து சுருக்கு கம்பிகளால் பரிதாபம்

Added : ஜூன் 18, 2020
Share

மேட்டுப்பாளையம் : சுருக்கு கம்பியில் சிக்கி, உயிருக்கு போராடிய சிறுத்தைக்கு, நான்கு நாட்களாக தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் நேற்று மாலை இறந்தது.

சிறுமுகை வனச்சரகம், சென்னாமலை கரடு அருகே அறிவொளி நகர் பகுதியில், நான்கு நாட்களுக்கு முன் தனியார் நிலத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி, 2 வயது சிறுத்தை பலத்த காயம் அடைந்தது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உள்ள குரங்குகள் மறுவாழ்வு மைய கட்டடத்தில், மருத்துவ சிகிச்சை அளித்தனர்.காயமடைந்த பகுதியில், தையல் போட்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். நேற்று காலை ரத்த சோகையினால் பாதிப்படைந்தது. மேல் சிகிச்சைக்காக வண்டலூர் மீட்பு மையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்த போதும், நேற்று மாலை, 6:15 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுத்தை இறந்தது. மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், "விவசாய நிலங்களில் சுருக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதா என, வனத்துறை குழுவினர், 30 தோட்டங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதங்களில் கோவை மாவட்டத்தில் சுருக்கு வைத்து விளையாட முயற்சி செய்தது குறித்து, 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.முயல் பிடிக்க சுருக்கு வைத்ததில், இந்த சிறுத்தை சிக்கியுள்ளது. விவசாய நிலங்களில் சுருக்குக் கம்பி வைக்கப்பட்டுள்ளதா என, தேடும் பணிகள் நடைபெறுகின்றன," என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X