சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க செயலாளர் பணி நீக்கம்; பல லட்சம் ரூபாய் முறைகேடு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

அன்னுார் : நிதி முறைகேடு புகாரால், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அன்னுார் ஒன்றியத்தில், குப்பேபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக கண்ணப்பன் பணிபுரிந்து வந்தார். இவர், செலவு சீட்டுகளை திருத்தி, பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக, சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்கள், இணை பதிவாளர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினர்.இதையடுத்து, கூட்டுறவு சார்பதிவாளர்கள் அடங்கிய குழு, கடந்த வாரம் குப்பேபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆவணங்கள், செலவு சீட்டுகளை ஆய்வு செய்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனி சாமி வெளியிட்டுள்ள உத்தரவில், 'துணைப் பதிவாளர் அளித்த ஆய்வு அறிக்கையின்படி, குப்பே பாளையம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கண்ணப்பன், சங்கத்தில் நிதி முறைகேடுகள் புரிந்ததால், சங்க நலன் மற்றும் சங்க உறுப்பினர்களின் நலன் கருதி, பொது பணிநிலை திறன் விதியின் கீழ், ஜூன் 15 முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X