பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மகசூல் தரும் புதிய பாசி பயறு!

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கோவை : குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும், புதிய பாசிப்பயறு ரகம், கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விதைச்சான்று உதவி இயக்குனர் வானதி கூறியதாவது:விவசாயிகள் குறுகிய காலத்தில், அதிகம் விளைச்சலை பெற, இந்திய பயறு வகை ஆராய்ச்சி நிலையம் விராத் (ஐபிஎம் 205-7) என்ற, புதிய பாசிபயறு ரகத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த பாசிபயறு ரகம், மிகவும் குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும். ஒரு செடிக்கு, 35 முதல், 40 காய்கள் வரை காய்க்கும். பயிரிட்ட, 55 நாட்களில் ஒரே தடவை மொத்த அறுவடையும் செய்யலாம்.இதன் விதைகளை, சூலுார், அன்னுார், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X