பொது செய்தி

தமிழ்நாடு

வீரமரணம் அடைந்த பழனி உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
ராமநாதபுரம்: சீன ராணுவத்தின் தாக்குதலால் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி உடல், அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்திய - சீன எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக நமது ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் பழனியின் உடல், ராணுவ
palani, Madurai airport, ramanathapuram news, tamil nadu news,  Indian Army soldier Palani, Galwan Valley, india china border dispute, பழனி, ராணுவவீரர், வீரமரணம், ராமநாதபுரம், ராணுவம், நல்லடக்கம்,

ராமநாதபுரம்: சீன ராணுவத்தின் தாக்குதலால் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி உடல், அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்திய - சீன எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக நமது ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் பழனியின் உடல், ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்ட கலெக்டர் வினய் மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் எடுத்து செல்லப்பட்டது.


latest tamil news


கிராம எல்லையில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்திற்கு அவரது உடல் ராணுவ வாகனத்தில் மாற்றப்பட்டு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தேசிய கொடி போர்த்திய பழனியின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்துக்கு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சொந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
18-ஜூன்-202020:38:47 IST Report Abuse
Charles நாட்டின் நலம் கருதாமல் குடும்ப சொத்தை பெரிதாக்கியவர்கள் சிலரை கடற்கரையில் நல்லடக்கம் செய்தார்கள் அரசியல் செய்து பணம் கோடிக்கணக்கில் சேர்ந்தவர்களை ஏன் நினைவில்கொள்ளவேண்டும்?? நாட்டுக்காகவே வாழ்ந்து நாட்டுக்காக வீர மரணம் அடைந்தவர்களுக்கு அமெரிக்காவைப்போல் ஒரு தனி அமைதிப்பூங்காவை ஏற்படுத்தவேண்டும். அதில் மக்கள் சென்று அவர்களுக்கு உரிய மரியாதையும் வணக்கத்தையும் செலுத்த வழி வகுக்கவேண்டும்... இதை நம் நாட்டு அரசியல்வாதிகள் செய்வார்களென்று நம்புகிறேன்
Rate this:
Cancel
18-ஜூன்-202019:41:56 IST Report Abuse
C.RAMS TIRUPPUR தாய்நாட்டுக்காக உயிர்நீத்த எம் சகோதர்களுக்கு வீர வணக்கம் அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-ஜூன்-202015:51:55 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்தியாவுக்காக பாடுபடும் ராணுவவீரகளை அவமதித்து கேலி செய்வதே கலைஞருக்கு கைவந்த கலை ..நாட்டை சுரண்டி பிழைக்கு கூட்டத்திடம் நாட்டு பற்று எதிர்பார்ப்பது சூரியன் மேற்கில் தோன்றினால் மட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X