தமிழ்நாடு

விமானத்தில் 'பறந்து' வரும் வைரஸ்; பயணிகளை 'வடிகட்ட' கோரிக்கை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement
விமானத்தில் 'பறந்து' வரும் வைரஸ்; பயணிகளை 'வடிகட்ட' கோரிக்கை

கோவை : 'கொரோனா வைரஸ் இல்லாத கோவை' என்றபெருமை மிக்கநிலை மாறி, இன்று தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து வரும் விமானம், ரயில் வாயிலாகவே, வைரஸ் தொற்றுள்ளவர்கள் கோவைக்கு வருவதால், பயணிகளை சென்னையிலேயே தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகே, விமானத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பின்பு, கடந்த மே 25ம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டது. தற்போது வரை, டில்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 89 விமானங்களில், 10,929 பேர் கோவை வந்துள்ளனர்.இதில், 4,730 பேர் கோவையை சேர்ந்தவர்கள். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆரம்பத்தில், ஒரு விமானத்தில் ஒன்று, இரண்டு என்று இருந்த, தொற்று எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து, கோவை வந்த விமானத்தில் மட்டும், 13 பேருக்கும், டில்லியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில், 2 பேர் உட்பட, 15 பேருக்கும், நேற்று தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் அனைவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு விமானத்தில், 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், உடன் பயணித்த பயணிகளுக்கும், கட்டாயம் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.ஆகவே சக பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:விமானம் வாயிலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே, பயணிகள் வருவார்கள் என்பதால், இவர்களை கண்காணிப்பதில் சிரமம் இல்லை. ஆனால், குறுகிய அமைப்புள்ள விமானத்தில் சில மணி நேரம், அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டியுள்ளது; ஏ.சி., பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்று.

இச்சூழலில், தொற்று பாதித்த யாரோ ஒருவரால், சக பயணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. குறுகிய அமைப்புள்ள விமானத்தில் சில மணி நேரம், அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டியுள்ளது; ஏ.சி., பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்று.இச்சூழலில், தொற்று பாதித்த யாரோ ஒருவரால், சக பயணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. ஆகவே, சென்னை உட்பட பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் இருந்து வரும், விமான சேவையை, கட்டாயம் நிறுத்த வேண்டும்.

அல்லது, விமான டிக்கெட் பதிவு செய்பவர்கள் அனைவரையும், முழு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தொற்று உள்ளவர்களை, அந்தந்த பகுதிகளிலேயே, வடிகட்டி விட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக மட்டுமே, கோவைக்கு சென்னை நிலைமை வராமல் காப்பாற்ற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

விமான டிக்கெட் பதிவு செய்பவர்கள் அனைவரையும், முழு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தொற்று உள்ளவர்களை, அந்தந்த பகுதிகளிலேயே, வடிகட்டி விட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக மட்டுமே, கோவைக்கு சென்னை நிலைமை வராமல் காப்பாற்ற முடியும்.குறுகிய அமைப்புள்ள விமானத்தில் சில மணி நேரம், அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டியுள்ளது; ஏ.சி., பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்று. இச்சூழலில், தொற்று பாதித்த யாரோ ஒருவரால், சக பயணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X