பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10.11 லட்சத்துக்கு வாகனங்கள் ஏலம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசாரால், பறிமுதல் செய்யப்பட்ட, 62 டூவீலர்கள், எட்டு நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம், 70 வாகனங்கள் நேற்று ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. கூடுதல் எஸ்.பி. பொன்கார்த்தி குமார் தலைமை வகித்தார். டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் விஜயன் உள்ளிட்டோர் ஏலத்தை நடத்தினர். இதில், 57 டூவீலர்கள், ஆறு நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம், 10 லட்சத்து, 11 ஆயிரத்து 926 ரூபாய்க்கு ஏலம் போயின. ஏலம் எடுத்தவர்கள், உடனடியாக தொகையை செலுத்தி வாகனங்களை எடுத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X