ராணுவ வீரர் மறைவுக்கு இரங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர் மறைவுக்கு இரங்கல்

Added : ஜூன் 18, 2020
Share

ஈரோடு: இந்தியாவின் லடாக் எல்லை பகுதியில், சீன ராணுவம் தாக்கியதில், இந்திய ராணுவ வீரர்கள், 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு, உலக தமிழர் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஜெபமாலைராஜன், கண்டனம் தெரிவித்துள்ளார். சீனாவின் அத்துமீறலால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு உடன் தலையிட்டு, எல்லை பகுதியில் அமைதியை ஏற்படுத்தி, இந்திய ராணுவத்தினர் கொல்லப்படுவது தடுத்து நிறுத்த வேண்டும். வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த வீரர் உள்ளிட்ட, 20 வீரர்களுக்கும் வீரவணக்கத்துடன், இரங்கல் தெரிவிப்பதாக, கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X