புன்செய்புளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புன்செய்புளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : ஜூன் 18, 2020
Share
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. புன்செய்புளியம்பட்டி-அவிநாசி சாலை, டாணாபுதூர் முதல் மின்வாரிய அலுவலகம் வரை, சாலையின் இருபக்கங்களிலும், கடைகள், விளம்பர போர்டுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. மேலும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், வீடு உள்ளிட்ட கட்டடங்களை ஆக்கிரமித்து கட்டியிருந்தனர். இதனால், வாகன

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. புன்செய்புளியம்பட்டி-அவிநாசி சாலை, டாணாபுதூர் முதல் மின்வாரிய அலுவலகம் வரை, சாலையின் இருபக்கங்களிலும், கடைகள், விளம்பர போர்டுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. மேலும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், வீடு உள்ளிட்ட கட்டடங்களை ஆக்கிரமித்து கட்டியிருந்தனர். இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதையடுத்து, அவிநாசி நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்துள்ளவர்கள், ஜூன், 16க்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். தவறினால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்படும் என, அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து எச்சரித்தனர். கெடு முடிந்ததால், நேற்று காலை பொக்லைன் இயந்திரத்துடன், உதவி கோட்ட பொறியாளர் குருமூர்த்தி தலைமையில் ஊழியர்கள் வந்தனர். டாணாபுதூர், நால்ரோடு பகுதியில் இருந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. சில கடைக்காரர்கள், அதிகாரிகள் வரும் முன்பே சிமென்ட் சீட், பிளக்ஸ் போர்டு, பந்தல்களை, தாமாகவே அகற்றிக் கொண்டனர். மற்ற இடங்களில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை ஊழியர்கள் அகற்றினர். உதவி கோட்ட பொறியாளர் குருமூர்த்தி கூறுகையில், ''அவிநாசி சாலையில், விரிவாக்க பணிகள் துவங்க உள்ளன. முந்தைய சர்வே படி, எடுக்கப்பட்ட அளவுகளின் கீழ், நடப்பட்ட கல்லை அளவாக வைத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X