பொது செய்தி

இந்தியா

குழந்தையின் முகத்தை பார்க்காமலேயே வீரமரணமடைந்த வீரர்

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
ராஞ்சி: சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களில் ஒருவரான குந்தன் குமார் என்பவருக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முகத்தை பார்ப்பதற்குள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20
Ladakh standoff, india china, india, china, border dispute, Galwan Valley, லடாக், எல்லை, சீனா, இந்தியா, தாக்குதல், ராணுவவீரர், வீரமரணம், குழந்தை

ராஞ்சி: சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களில் ஒருவரான குந்தன் குமார் என்பவருக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முகத்தை பார்ப்பதற்குள் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வீரமரணம் அடைந்தவர்களின் பட்டியலை இந்திய ராணுவம் நேற்று (ஜூன் 17) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால் சீனா தரப்பில் உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க அந்நாட்டு அரசு மறுக்கிறது.


latest tamil news


வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களில் ஜார்க்கண்ட் மாநிலம் திஹாரி கிராமத்தைச் சேர்ந்த குந்தன் குமார் ஓஜாவும் ஒருவர். இவருக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 18 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்துள்ள செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த குந்தன், விரைவில் வீடு திரும்புவதாக கூறியுள்ளார். தீக்ஷா என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தையை, குந்தன் குமார் இதுவரை பார்க்கவில்லை. எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், நிலைமை சீரான பிறகு மகளை காண ஜார்க்கண்ட் வருவதாகவும் மனைவியிடம் உறுதியளித்துள்ளார்.


latest tamil news


தனது மகளை காண ஆவலுடன் காத்திருந்த அவர், குழந்தையின் முகத்தை பார்க்காமல் சீன ராணுவத்துடன் நடந்த மோதலின் போது வீரமரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளை காண வேண்டும் என்ற அவரது ஆசை இறுதிவரை நிறைவேறாமல் போய் விட்டதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். குந்தன் குமார், கடந்த 2011ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
19-ஜூன்-202012:55:15 IST Report Abuse
s t rajan கே கே நகர் ஜே ஜே நகர், நேரு ஸ்டேடியம், ராஜீவ் கல்லூரி என்பதையெல்லாம் இந்த உண்மையான தேச தியாகிகளுக்கு அர்ப்பணித்து, அவர்களின் பெயரை சூட்டுங்கள். கொள்ளையடித்து தன் பரம்பரையை மட்டுமே கவனித்துக் கொண்டு ஏழைகளுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் அரசியல் வ்யாதிகளைக் குப்பையில் தள்ளுங்கள். அப்போது இந்தக் கடமை வீரர்களின் தியாகத்திற்கு உண்மையான மதிப்பு தெரியும். இந்தக் கொராணா ஆலைக்கு நடுவிலும் வியாதியால் 90 வயதில் உயிரை விட்டவர்களூக்கெல்ஸாம் போஸ்டர் ஒட்டும் மடமையை நினைத்தால் வயிறு எரிகிறது. அதுவே உண்மைக்காக கக்கன் அவர்களை யாரேனும் நினைத்தார்களா ? நன்றியில்லாத ஜனங்களாய் இன்னும் இருக்காதீர்கள்.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
18-ஜூன்-202018:35:29 IST Report Abuse
M.COM.N.K.K. எங்கள் மனம் மிகவும் வேதனைப்படுகிறது.சீனர்களை பழிவாங்குவதே சரியானதாக இருக்கும் சீன மிருகங்களை கொன்றுகுவிக்கவேண்டும்.சீனர்களை அணுவணுவாக சித்திரவதை செய்து கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு நாம் செய்யும் வீரவணக்கமாக இருக்கும்.
Rate this:
Cancel
krishnaraj - bangalore,இந்தியா
18-ஜூன்-202016:02:54 IST Report Abuse
krishnaraj Avenge-First
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X