பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனை; கமிஷனர் தகவல்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஈரோடு: ''மாநகராட்சியில், கர்ப்பிணிகளுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என, ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில், 1.30 லட்சம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஆசியர்கள், 1,300 பேர் ஒவ்வொரு வீடாக சென்று சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அதில், கர்ப்பிணி பெண்கள் உள்ள வீடுகளை தனியாக கணக்கில் கொண்டு வரவேண்டும் என, உத்தரவிடப்பட்டது. அந்த பட்டியலின் அடிப்படையில், ஆய்வு செய்து வருகின்றனர். அதன் மூலம், வளையாக்கார வீதியை, 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, உடல் பலவீனமான கர்ப்பிணி பெண்கள் மீது தனி கவனம் செலுத்தி, செவிலியர்கள் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X