பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஒரு ஆண், ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 72 பேர் கொரோனா பாதித்து, குணமடைந்தனர். இதற்கிடையில், ஈரோடு மாநகராட்சி, வளையக்கார வீதியில் டாக்ஸி டிரைவரின் மனைவிக்கு கடந்த ஞாயிறு அன்று, கொரோனா உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், சுகாதாரத்துறையினர், வளையக்கார வீதி, அகத்தியர் வீதிகளில் உள்ளவர்களுக்கு பி.சி.ஆர்., பரிசோதனை செய்தனர். இதில், அகத்தியர் வீதியில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் கூலி தொழிலாளி ஒருவருக்கும், டாக்ஸி டிரைவரின் வீடு உள்ள பகுதியில் மெஸ் வைத்து நடத்தி வரும், 50 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, இருவரும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வளையக்கார வீதி, அகத்தியர் வீதிகளில் பேரிக்கார்டு வைத்து, தடை செய்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதனால், ஈரோட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, 75 என உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X