பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு ரயில்வே காலனியில் மயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு, ரயில்வே காலனி யில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, விஜயமங்கலம், துடுப்பதி உள்ளிட்ட பகுதிகளில், மயில்கள் எண்ணிக்கை அதிகம். அப்பகுதியை, மயில்கள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளளர். இந் நிலையில், ஈரோட்டில் ரயில்வே காலனி, வைராபாளையம், கருங்கல்பாளையம், வெள்ளோடு, மைலாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள், மரங்கள், வயல்கள், தோட்டம், வீடுகளின் மொட்டை மாடிகளில் சர்வசாதாரணமாக மயில்களை காணமுடிகிறது. குறிப்பாக, ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள மரத்தில் மயில்கள் அமர்ந்திருப்பதை காணலாம். அவை கார் மேகத்தை கண்டால், தோகை விரித்து ஆடுவதும், நடப்பதும், மனதை கொள்ளை கொள்கிறது. கூவும் சத்தம் ரயில் ஹாரன் ஒலியை மிஞ்சுகிறது. மயில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து, ரயில்வே காலனியில் குடியிருப்பு வாசிகள் கூறியதாவது: மயில்கள், பயிர்களை நாசம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும், அவை பாம்பு, தேள், பூரான், மரப்பல்லி உள்ளிட்ட விஷ ஜந்துகளிடம் இருந்து காக்கிறது. மழை மேகம் திரண்டு வரும் போது, தோகை விரித்து மயில்கள் ஆடுவதை பார்க்கும் போது மனம் குதூகலிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X