கரும்பு நிலுவை ரூ.22,000 கோடி வழங்க வலியுறுத்தி தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு நிலுவை ரூ.22,000 கோடி வழங்க வலியுறுத்தி தீர்மானம்

Added : ஜூன் 18, 2020
Share

ஈரோடு: ஈரோட்டில், தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம், கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடந்தது. சுதந்திரத்துக்கு முன், தமிழகத்தில் இனிப்பு தேவையை பனங்கருப்பட்டி பூர்த்தி செய்தது. காலப்போக்கில், நாட்டு சர்க்கரை நடைமுறைக்கு வந்தது. பின், வெள்ளை சர்க்கரை ஆதிக்கம் செலுத்துகிறது. தேசிய அளவில், 500க்கும் மேற்பட்ட பெரிய சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளுக்கு, தட்டுப்பாடு இன்றி கரும்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பகுதி வாரியாக பிரித்து, விவசாயிகள் பயிரிடும் கரும்பை, அப்பகுதியில் உள்ள கரும்பு ஆலைக்கே வழங்க வேண்டும் என, ஒப்பந்தம் செய்கின்றனர். வெளி நபருக்கு விற்பனை செய்தால், குற்றமாகும். இதற்காக கரும்பு கட்டுப்பாடு ஆணை சட்டம்- 1966ல் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டத்தில், ஆலைகளுக்கு சாதகமான பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால், தேசிய அளவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, 22 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகம் வழங்காமல் இழுத்தடிக்கிறது. பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகள், ஆலை நிர்வாகத்தை அழைத்து பேசி, நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமசாமி, சண்முகம், செல்லப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X