பொது செய்தி

தமிழ்நாடு

காவிரியில் 7 கதவணைகளில் மின் உற்பத்தி துவக்கம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்காக காவிரி ஆற்றில் கடந்த, 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு, பாசனப்பகுதிக்கு தண்ணீர் செல்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் முழு அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கதவணை நீர் மின் நலையங்களில் மின்சார உற்பத்தி உற்பத்தி துவங்கியது.
இது குறித்து, மின்வாரிய பொறியாளர்கள் கூறியதாவது: காவிரி ஆற்றில் அமைந்துள்ள செக்கனூர், நெருஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சிகோட்டை, பி.பி.அக்ரஹாரம், வெண்டிபாளையம், கொக்கராயன்பேட்டை என, ஏழு இடங்களில் கதவணை நீர் மின் நிலையங்கள் (பேரேஜ்) உள்ளன. இந்த கதவணைகளில் தலா, இரண்டு இயந்திரங்கள் அமைந்துள்ளதால், ஒவ்வொரு இயந்திரத்திலும் தலா, 20 மெகாவாட் என தலா, 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். கடந்த பிப்ரவரியில், மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், பேரேஜில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு, தற்போது முழு அளவில் மின் உற்பத்தி துவங்கி உள்ளது. மேட்டூர் அணையில் திருப்திகரமாக நீர் உள்ளதால், தொடர்ந்து மின் உற்பத்தி நடக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X