சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சைக்கிள் ஓட்டி சென்ற சிறுவன் மாயம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், பூந்துறைசேமூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, பொத்திக்காட்டுத்தோட்டத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பிரானேஷ், 15, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து, தனது ஹீரோ சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டி சென்றவர், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்காததால், மகனை கண்டுபிடித்து தரக்கோரி, அரச்சலூர் போலீசில் சிறுவனின் பெற்றோர் புகாரளித்தனர். எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவின்படி, மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையில், தனிப்படை அமைத்து மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X