பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா: பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு

Updated : ஜூன் 18, 2020 | Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.6 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,237 ஆக உள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 12,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால்
coronavirus death toll, covid 19, health, coronavirus india, கொரோனா, கொரோனாவைரஸ்,  இந்தியா, கோவிட்-19, பாதிப்பு, தொற்று, அதிகரிப்பு, உயர்வு,  உயிரிழப்பு, பலி

புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.6 லட்சமாக அதிகரித்தது. உயிரிழப்பு 12,237 ஆக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 12,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




மாநில வாரியாக பாதிப்பு விவரம்


மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,16,752 - 5,651

தமிழகம்- 50,193 - 576

டில்லி -47,102-1,904

குஜராத்-25,093-1,560

உ.பி.,--14,598-435

ராஜஸ்தான்-13,542-313

மேற்கு வங்கம்- 12,300-506

ம.பி.,-11,244-482

ஹரியானா-8,832-130

கர்நாடகா-7,734-102

ஆந்திரா 7,071-90

பீஹார்-6,942-44

தெலுங்கானா-5,675-192

காஷ்மீர்-5,406-65

அசாம்-4,605-08

ஒடிசா-4,338-11

பஞ்சாப் 3,197-72

கேரளா-2,697-20

உத்தர்காண்ட்-2,023-26

ஜார்க்கண்ட்-1,895-10

சத்தீஸ்கர்-1,864-10

திரிபுரா-1,135-01

லடாக்-687-01

கோவா-656-0

ஹிமாச்சல பிரதேசம்-56908

மணிப்பூர்-552-0

சண்டிகர்-358-06

புதுச்சேரி-245-07

நாகலாந்து-193-0

மிசோரம்-121-0

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiru - Chennai,இந்தியா
18-ஜூன்-202010:55:38 IST Report Abuse
Thiru டெல்லி மாநாடு மனம் குளிர்ந்ததா?. காவு எண்ணிக்கை கூடாமல் இருக்குமா? பழைய வாழ்க்கை தொடருமா?
Rate this:
remo - ,
18-ஜூன்-202022:34:18 IST Report Abuse
remoneed to find out medicine quickly...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X