தமிழ்நாடு

3 பெண் உள்பட 5 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், மூன்று பெண் உள்பட ஐந்து பேருக்கு, 'கொரோனா' தொற்று உறுதியாகியுள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம், முதலாவது வார்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 75, 70 வயது பெண்கள், 56 வயது ஆண் ஆகியோர், கடந்த, 15ல், சென்னை, அம்பத்தூரில் இருந்து, காரில், சொந்த ஊர் வந்தனர். இதனால், ஆரியபாளையம் மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் குழுவினர், பரிசோதனை செய்தனர். அதில், மூவருக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது. இரு பெண்கள், நேற்று, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆண், சென்னைக்கு சென்றதால், அவரது மருத்துவ அறிக்கை தகவலை, சென்னை மருத்துவ குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து வந்த, வாழப்பாடியைச் சேர்ந்த, 34 வயது பெண்ணுக்கு, கொரோனா இருப்பது உறுதியானது. அவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆத்தூர், ஈச்சம்பட்டியைச் சேர்ந்த, ரிக் வண்டியில், கோவாவைச் சேர்ந்த, 22 வயது ஆண், தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம், அவர், ரிக் வண்டி உரிமையாளர்கள், குடும்பத்தினர் என, நான்கு பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில், கோவா வாலிபருக்கு, தொற்று உறுதியானதால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், நேற்று, ஐந்து பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

ஒரே குடும்பத்தில் 7 பேர்: கெங்கவல்லி, நடுவலூரை சேர்ந்த, 24 வயது வாலிபர், மண் கடத்தல் வழக்கில் சிக்கினார். அவருக்கு, 'கொரோனா' தொற்று இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, அந்த வாலிபரின், 30 வயது சகோதாரர், பெற்றோர் என, ஏழு பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

கலெக்டர் ஆய்வு: தலைவாசல் சுற்றுவட்டாரத்தில், மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது, நேற்று முன்தினம் உறுதியானது. அவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கலெக்டர் ராமன், நேற்று ஆய்வு செய்தார். நத்தக்கரை சுங்கச்சாவடியில், 'கொரோனா' பரிசோதனை முகாம் பணியை பார்வையிட்டார். தொற்று பாதிப்பு ஏற்பட்ட இடங்களில், தடுப்பு, விழிப்புணர்வு பணி குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன், கவர்பனை, நத்தக்கரை முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை விபரம் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.

20 பேருக்கு பரிசோதனை: நிலவாரப்பட்டியைச் சேர்ந்த, 24 வயது வாலிபர், ரேஷன் அரிசி கடத்தியபோது, போலீசாரிடம் சிக்கினார். அவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். நேற்று, நிலவாரப்பட்டியைச் சேர்ந்த அந்த வாலிபரின் குடும்பத்தினர், ஐந்து பேர், நண்பர்கள், 15 பேரிடம், சுகாதாரத்துறையினர் சளி மாதிரி சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பினர். அத்துடன், நிலவாரப்பட்டி, ஏலக்கரடு பகுதியில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொண்டனர்.

மரத்தடியில் பணிபுரியும் கெங்கவல்லி போலீசார்: நடுவலூர் ஏரியில், மண் கடத்தி விற்ற, 24 வயதுடையவரை, கடந்த, 15ல், கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர். அவருக்கு, மருத்துவ பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது, நேற்று முன்தினம் உறுதியானது. பேரூராட்சி சுகாதார பணியாளர்கள், ஸ்டேஷன் வளாகம் முழுதும் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். மக்கள், ஸ்டேஷனுக்கு வரவேண்டாம் என, போலீசார் அறிவுறுத்தினர். இதனால், நேற்று, ஸ்டேஷனின் கதவை மட்டும் திறந்து வைத்து, முன் பகுதியில் உள்ள மரத்தடியில் இருக்கைகளை போட்டு, வீரகனூர், ஆத்தூர் ஸ்டேஷன் போலீசார், தலா, இருவர் வீதம் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் உள்பட, 16 பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதன் மருத்துவ அறிக்கை வரும் வரை, ஸ்டேஷனுக்குள் யாரும் செல்ல வேண்டாம் என, மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மீண்டும் தடுப்பு அமைப்பு: இளம்பிள்ளை அருகே, மெய்யனூர், பனங்காட்டைச் சேர்ந்த இருவரை, கடந்த, 9ல், இரும்பாலை போலீசார், திருட்டு வழக்கில் கைது செய்தனர். அவர்களுக்கு, தொற்று உறுதியானதால், அப்பகுதியில் உள்ள, 122 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை. முன்னதாக, வெளிநபர்கள் நுழையாதபடி, சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம், தொற்று பாதித்த குடும்பத்தை சேர்ந்த, 17 பேருக்கு பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை என தெரியவந்தது. இதனால், நேற்று காலை, அப்பகுதியிலுள்ள தடுப்புகளை, மர்ம நபர்கள் அகற்ற, வானங்கள் வழக்கம்போல் சென்றன. இதையறிந்த பேரூராட்சி ஊழியர்கள், மாலை, மீண்டும் தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X