ரயிலில் சேலம் வந்த 2,600 டன் மக்காச்சோளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் சேலம் வந்த 2,600 டன் மக்காச்சோளம்

Added : ஜூன் 18, 2020
Share

சேலம்: 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கால், குறிப்பிட்ட சேவைகளை மட்டும், ரயில்வே துறை இயக்கி வருகிறது. அதில், அத்தியாவசிய உணவு பொருள், மருந்துக்கு சரக்கு ரயில் சேவை தடையின்றி இயக்கப்படுகிறது. பீகாரில் இருந்து, சரக்கு ரயில் மூலம், 2,600 டன் மக்காச்சோளம், நேற்று, சேலம், செவ்வாய்பேட்டை கூட்ஸ் ?ஷட் ஸ்டேஷனுக்கு வந்தது. கிருமிநாசினி மூலம், கைகளை சுத்தப்படுத்திய பின், சமூக இடைவெளியில், சுமை தூக்கும் பணியாளர்கள், லாரிகளில் ஏற்றி, பல்வேறு பகுதிகளில் உள்ள குடோன்களுக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X