பொது செய்தி

தமிழ்நாடு

கருப்பூர், ஓமலூரில் மின்தடையால் அவதி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சேலம்: நேற்று முன்தினம் மின்தடை செய்யப்பட்ட நிலையில், கருப்பூரில் மீண்டும் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் கருப்பூர் மற்றும் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், கடந்த, செவ்வாய்கிழமை மின்தடை செய்யப்பட்டது. காலை, 9:00 மணியிலிருந்து, மதியம், 2:00 மணி வரை, மின்சாரம் நிறுத்தப்பட்டது. கே.ஆர்.தோப்பூர் துணை மின்நிலையத்தில் அவசர பணி நடைபெறுவதால், இந்த மின்தடை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில்லாமல், மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக, மீண்டும் நாளை கருப்பூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டு நாட்கள், மின் தடை அறிவிப்பு காரணமாக, அப்பகுதி மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். கோடை வெப்பத்தில் அவதிப்படும் மக்களுக்கு, மீண்டும் மின்தடை அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அவசர பணிக்காக மின் தடை செய்யப்பட்டிருப்பினும், அதே நேரத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தால், இதை தவிர்த்திருக்கலாம் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

* ஓமலூர் அருகே, பெரமச்சூரிலிருந்து, தும்பிப்பாடி வரை, ஒரே மின்பாதை உள்ளது. ஓமலூர் நகரில், 8,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. அங்கு, நேற்று முன்தினம் மட்டும், எட்டு முறை மின்தடை ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும், அரை மணி நேரத்துக்கு பின், மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. நேற்று காலை, மதியமும், மின்தடை ஏற்பட்டு, 15 நிமிடத்தில் வினியோகிக்கப்பட்டது. இரு நாளாக, அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால், மக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினர். அதேபோல், தும்பிப்பாடியிலிருந்த, 4,000 இணைப்புகளும் பாதிக்கப்பட்டன.


ஓமலூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'முதல்நாளில், உயர் மின்அழுத்த பாதை கம்பியில், ஈரமான புல் சிக்கியதால், கண்டுபிடித்து அகற்ற, அடிக்கடி மின்தடை செய்யும் நிலை ஏற்பட்டது. இரண்டாம் நாளில், மேட்டூரிலிருந்து பெறக்கூடிய மின் இணைப்பை மாற்றும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X