ரேஷன் பணியாளருக்கு முழு உடல் பரிசோதனை: கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பணியாளருக்கு முழு உடல் பரிசோதனை: கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு

Added : ஜூன் 18, 2020
Share

சேலம்: ரேஷன் பணியாளருக்கு, ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை நடத்த, அந்தந்த கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்ரமணியம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ரேஷன் கடை பணியாளர், ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள, சங்கம், 75 சதவீதம், பணியாளர், 25 சதவீதம் கட்டணம் செலுத்தினால், இத்திட்டம், இருசாரருக்கும் பயனாக இருக்கும் என, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதற்காக, 1,000 ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதில், அந்தந்த மாவட்ட, வட்டார அரசு மருத்துவமனைகளில் முழுஉடல் பரிசோதனை செய்துகொள்ள, கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், ரேஷன் கடை பணியாளருக்கு அந்தந்த மாவட்ட, வட்டார அரசு மருத்துவமனைகளில், ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய, கலெக்டரை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திட்டத்தை செயல்படுத்தி விபரங்களை தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X