பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு இ - நூலகம் தொடக்கம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரத்தில் உள்ள, மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், ஊரடங்கு காலத்தை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ள, இ - நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவன முதல்வர் செல்வம் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தலில் உதவ, இ - நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் அங்கன்வாடி பணியாளர் முதல், கல்லூரி பேராசிரியர் வரை அனைத்து தரப்பினரும் பயன்பெறலாம். பதிவு செய்து கொள்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப, இலவச பொது பயன்பாட்டுடன் கூடிய புத்தகம், மின் இதழ், கற்றல் கற்பித்தல் செய்தி, கல்வி சார்ந்த செய்தி, செய்தி துணுக்கு, ஒலி ஒளி வடிவில் குறும்படங்களாக ஆசிரியர்களின் இணைய முகவரி அல்லது மொபைல் போனில் 'வாட்ஸ்ஆப்' செயலி மூலம் அனுப்பப்படும். கட்டணம் ஏதும் இல்லை. ஆர்வமுள்ள ஆசிரியர், தங்கள் பெயர், முகவரி, பணிபுரியும் பள்ளி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியுடன், https://forms.gle.4HD7gDQUHKuwx32m8 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X