பொது செய்தி

தமிழ்நாடு

டீசல் விலையில் 70 சதவீதம் அரசுகளின் வரியே! அகில இந்திய மோட்டார் காங்., குற்றச்சாட்டு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சேலம்: ''டீசல் விலையில், 70 சதவீதம், மத்திய, மாநில அரசுகளின் வரிதான்,'' என, அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறினார்.
இதுகுறித்து, அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2014ல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய், 140 டாலருக்கு விற்ற நிலையில், இந்தியாவில், டீசல் விலையில், மாநில அரசின் வாட் வரி, 9.72 ரூபாய், மத்திய அரசின் கலால் வரி, 4.04 ரூபாய், டீலர் கமிஷன், 1.76 ரூபாய் என்ற வகையில், டீசல், 66.02 ரூபாய்க்கு விற்றது. இன்று, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, பீப்பாய், 0 டாலருக்கும் குறைவாக உள்ள நிலையில், டீசலின் அடிப்படை விலை, 18.72 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. இதனுடன், மாநில அரசின் வாட் வரி, 15.09 ரூபாய், மத்திய அரசின் கலால் வரி, 31.83 ரூபாய், டீலர் கமிஷன், 2.50 ரூபாய் என கணக்கிட்டு, டீசல், 68.22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில், 70 சதவீதம், மத்திய, மாநில அரசுகளின் வரியே உள்ளது. இன்று, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில், அதன் முழு பலன், மோட்டார் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது ஊரடங்கால், சிறு, குறு தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்திய நிலையில், 70 சதவீத லாரிகள், 'லோடு' கிடைக்காமல் முடங்கியுள்ளன. குறைந்த அளவில் இயங்கும் லாரிகளும், டீசல் விலை அதிகரிப்பால், தொடர்ந்து இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊரடங்கு முழுமையாக விலகி தொழில் மீண்டும் சுறுசுறுப்பு அடையும் வரை, மத்திய, மாநில அரசுகள், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். இல்லையெனில், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, 5 கோடிக்கு மேலான தொழிலாளரின் வாழ்வதாரம் கேள்விக்குறியாகும். அதனால், மத்திய, மாநில அரசுகள், டீசல் மீதான வரி, மாநில அரசின் காலாண்டு வரி ரத்து, இன்சூரன்ஸ் தொகை குறைப்பு, வங்கிகளிடம் பெற்ற கடன் தவணை வட்டி ரத்து ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றி, மோட்டார் தொழிலை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X