இடைப்பாடி சரபங்கா ஆறு தூர்வாரும் பணி தொடக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடைப்பாடி சரபங்கா ஆறு தூர்வாரும் பணி தொடக்கம்

Added : ஜூன் 18, 2020
Share

இடைப்பாடி: சரபங்கா ஆற்றை தூர்வாரும் பணி தொடங்கியது. மேட்டூர் அணை உபரிநீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி சட்டசபை தொகுதிகளில் உள்ள, 100 ஏரிகளுக்கு நிரப்ப, அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சரபங்கா ஆற்றை தூர்வார, தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, இடைப்பாடி பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள சரபங்கா ஆற்றின் இரு கரைகளையும், 0.5 கி.மீ., தூரம் தூர்வாரும் பணி, கவுண்டம்பட்டி சரபங்கா ஆற்றில், 0.5 கி.மீ., தூர்வாரும் பணி, எட்டு கோடியே, 92 லட்சம் ரூபாய் மதிப்பில், நேற்று தொடங்கப்பட்டது. பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், அப்பணியை தொடங்கிவைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X