சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் ஏற்றிச்சென்ற வைக்கோல் எரிந்து நாசம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

தலைவாசல்: லாரியில் ஏற்றிச்சென்ற, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய வைக்கோல் கட்டு எரிந்து நாசமானது. சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 61. டிரைவரான இவர், திருவாரூர், மன்னார்குடியில் இருந்து, சேலம் மாவட்டம், வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டைக்கு, வைக்கோல் ஏற்றிக்கொண்டு, நேற்று முன்தினம், லாரியை ஓட்டிவந்தார். இரவு, 10:00 மணிக்கு, தலைவாசல், நத்தக்கரை, ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது, வைக்கோல் கட்டு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால், சிவப்பிரகாசம், லாரியை நிறுத்தி, கயிறுகளை தளர்த்தி, வைக்கோல் கட்டுகளை தள்ளி விட்டார். இருப்பினும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் கொழுந்து விட்டு எரிந்தன. ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால், லாரி சேதமின்றி தப்பியது. இச்சம்பவத்தால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X