பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை உயர்வால் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு நாள்தோறும், 100 டன் தக்காளி வரத்து இருந்து வந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், வெளி மாவட்ட தக்காளி வரத்தின்றி தக்காளி வர்த்தகம் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டள்ளதால், வெளி மாவட்ட தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால், தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கடந்த வாரத்தில், ஒரு கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், தற்போது வறட்சியால், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது. இதனால், நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கும், நேற்று, 12 முதல், 15 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த, தொடர் விலை உயர்வால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஊரடங்கு தளர்வினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்துக்கும் தற்போது தக்காளி அனுப்பப்படுவதால், இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை தவிர்த்து, கொள்முதல் வருவாயாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X