பொது செய்தி

தமிழ்நாடு

சவுதியில் இறந்த கணவரின் உடலை கொண்டு வர இரு மனைவியர் மனு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

அரூர்: சவுதி அரேபியாவில் இறந்த கணவரது உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி, அவரது இரண்டு மனைவிகள், அரூர் சப்- கலெக்டரிடம் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாம்பாடியை சேர்ந்தவர் சின்னதுரை, 40; இவருக்கு, தமிழரசி, 37, கல்பனா, 35, என்ற இரு மனைவிகளும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர், கடந்தாண்டு டிசம்பரில், சமையல் வேலைக்கு சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், அங்குள்ள மருத்துவமனையில், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு மரணமடைந்ததாக, அவரது நண்பர் பீர்முகமது தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, அவரது மனைவியர் மற்றும் உறவினர்கள் நேற்று அரூர் சப்- கலெக்டர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X