நகை அடகு கடை பூட்டு உடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை அடகு கடை பூட்டு உடைப்பு

Added : ஜூன் 18, 2020
Share

அரூர்: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூரை சேர்ந்தவர் ராஜிகுமார், 34. இவர், தர்மபுரி மாவட்டம், நரிப்பள்ளியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த, 16 இரவு, 7:30 மணிக்கு கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை, 6:15 மணிக்கு வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது திருடு எதுவும் போகவில்லை. இது குறித்து, ராஜிகுமார் புகாரின்படி, கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X