மதுபோதையில் கொடுமை: கணவர் மீது மனைவி புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபோதையில் கொடுமை: கணவர் மீது மனைவி புகார்

Added : ஜூன் 18, 2020
Share

தர்மபுரி: மதுபோதையில், அடித்து துன்புறுத்தும் கணவர் மீது நடவடிக்கை கோரி, அவரது மனைவி கலா, 34, என்பவர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுகாலனியில் வசிக்கிறேன். கணவர் ஏசுதாஸ், 40, கூலித்தொழில் செய்கிறார். எங்களுக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நாள்தோறும் மதுபோதையில் வரும் கணவர், குழந்தைகள் மற்றும் என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை. எனவே, மதுபோதையில் துன்புறுத்தும் கணவர் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X