பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியில் கொட்டிய காலாவதி மருந்துகள்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: ஏரியில், காலாவதியான மருந்துகளை கொட்டியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, தேவசமுத்திரம் ஏரியில், தண்ணீர் உள்ள பகுதியில், காலாவதியான மாத்திரைகள், ஆண்டிபயாடிக் மருந்துகள், உடல் எடை அதிகரிக்க எடுத்துக் கொள்ளப்படும் பவுடர்கள், பல்வேறு டானிக் பாட்டில்கள் உள்ளிட்ட ஏராளமான மருந்துகள் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த ஏரியில், கிருஷ்ணகிரி நகரின் சாக்கடை கழிவுநீர் முழுவதும் நேரடியாக கலந்து, தண்ணீர் மாசடைந்து வரும் நிலையில், தற்போது காலாவதியான மருந்துகளை கொட்டுவதால் நாளடைவில் தண்ணீர் விஷமாக மாற வாய்ப்புள்ளது. இங்கு வரும் கால்நடைகள், செடிகளுடன் சேர்த்து இந்த மருந்துகளை உட்கொண்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், நியூட்ரிஷியன் மையங்கள் என அனைவரும், மருந்து கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என, அரசு உத்தர விட்டும், அவற்றை யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே, ஏரியில் காலாவதியான மருந்துகளை கொட்டியவர்கள் மீது, மருத்துவத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X