பொது செய்தி

தமிழ்நாடு

கேன்டீன் சமையல் உதவியாளர் கொரோனா தொற்றால் பலி

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூரில், உடல்நிலை பாதித்து உயிரிழந்த, சமையல் உதவியாளருக்கு, கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கோடிப்பள்ளி அருகே சீலேப்பள்ளியை சேர்ந்தவர், 38 வயது ஆண்; ஓசூர், சிப்காட்டில் உள்ள தனியார் ஜூவல்லரி நிறுவன கேன்டீனில், சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை, உடல்நிலை சரியில்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்ட தொழிலாளர்கள், ஓசூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அவரது சடலம் அனுப்பப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில், கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருந்தது, நேற்று மாலை உறுதியானது. அவருக்கு, எவ்வாறு தொற்று ஏற்பட்டது என, சுகாதாரத்துறைக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை. இறந்தவர் பணியாற்றிய நிறுவனத்தில், யாருக்கேனும் தொற்று இருந்து, அதன் மூலம் அவருக்கு பரவியதா என, சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஏற்கனவே, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான நிலையில், நேற்று இரண்டாவது பலி ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X