பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையிலிருந்து 508 கன அடி தண்ணீர் திறப்பு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், அணையிலிருந்து, 508 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு இம்மாத துவக்கத்தில் பெய்த மழையால், கடந்த, 3ல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணை நீர்மட்டம், 30.55 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு, 605 கன அடி நீர்வரத்து இருந்தது. தற்போது மதகு பணிகள் நடந்து வருவதால், 30 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 516 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, 14 நாட்களாக அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 720 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு, 422 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, இடது மற்றும் வலது புற வாய்காலில் இருந்து, 118 கன அடியும், தென்பெண்ணையாற்றில், 390 கன அடி என, 508 கன அடிநீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் நேற்று காலை, 29.50 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X