பொது செய்தி

தமிழ்நாடு

கி.கிரியில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., பாலாஜி நகரை சேர்ந்த, 27, வயது பெண்ணுக்கு நேற்று கொரோனா உறுதியானது. கிருஷ்ணகிரி அடுத்த சீமனுரை சேர்ந்த, 27, வயது ஆண், சென்னை ஆவடியில் பணி புரிகிறார். இவரது, 24, வயது மனைவி தற்போது, ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். சொந்த ஊருக்கு இருவரும், இருசக்கர வாகனத்தில் கடந்த, 14ல் சீமனூருக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையில், கர்ப்பிணிக்கு நேற்று கொரோனா உறுதியானது. பர்கூர் அருகே செட்டிப்பள்ளி யில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரிய செட்டிப்பள்ளியை சேர்ந்த, 48 வயது ஆண், 33 வயது பெண், 54 வயது பெண், சின்ன செட்டிப்பள்ளியை சேர்ந்த, 45 வயது பெண், 33 வயது ஆண், 41 வயது ஆண், 15 வயது சிறுவன் மற்றும், ஓசூரில் இரண்டு துப்புரவு ஆய்வாளர்கள் என, நேற்று ஒரே நாளில், 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கொரோனாவுக்கு, 15 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
தர்மபுரியில் 10 பேர் பாதிப்பு: கடந்த, 15ல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளுக்கு வந்த, 10க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினர், செட்டிக்கரை பொறியியல் கல்லூரியில் தனிமைப் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நடந்த பரிசோதனையில், நேற்று ஒரே நாளில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள. கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடைய குடும்பத்தினர், பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து தனிமைப்படுத்தி கண்காணிப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X