சென்னை உள்பட 4 மாவட்டத்துக்கு தனியார் கூரியர் சர்வீஸ்கள் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டத்துக்கு தனியார் கூரியர் சர்வீஸ்கள் நிறுத்தம்

Added : ஜூன் 18, 2020
Share

வேலூர்: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு, தனியார் கூரியர் சர்வீஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், தலைநகர் சென்னையில், கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வரும், 19 முதல், 30 வரை, முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு, கூரியர் சர்வீசில் தபால்கள் அனுப்ப 'புக்கிங்' செய்வது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தினர் கூறியதாவது: முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். மக்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த மாவட்டங்களில், கூரியர் சர்வீஸ் மூலம் பார்சல், தபால்கள் அனுப்ப, 'புக்கிங்' செய்வது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் தான், தபால்கள் 'புக்கிங்' செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதே சமயம், தபால் நிலையங்களில், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு, ஸ்பீடு போஸ்ட், பதிவு தபால்கள் 'புக்கிங்' செய்யப்படுவதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X