சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஈரோடு கணித ஆசிரியர் கைது

Added : ஜூன் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், எட்டு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி கணித ஆசிரியரை, மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ஈரோடு, திண்டல் தெற்குபள்ளம் ரோடு சரவணா நகரை சேர்ந்த கந்தசாமி மகன் கோவேந்தன், 35, ஈரோடு தனியார் பள்ளி கணித ஆசிரியர். இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். ஈரோட்டில் உள்ள நண்பர் வீட்டுக்கு, அடிக்கடி செல்லும் போது, அப்பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கி கொடுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். வலி தாங்க முடியாத சிறுமி, தன் பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர். ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி கோவேந்தன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர். பின்னர் அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamal -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-202013:21:46 IST Report Abuse
kamal Again. Vaathiyaar velaiyil irundhu kondu enna oru kevalam aana seyal, ithu ponra manitha mirugangalai veliye vidave koodathu. Sattam thakka thandanai kodukkum ena nambuvom.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X