பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் துப்புரவு ஆய்வாளர்கள் இருவருக்கு கொரோனா

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஓசூர்: சென்னையில் பணியாற்றி வந்த, ஓசூர் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் இருவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்களாக, 57 மற்றும் 50 வயது ஆண்கள் இருவர் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே, 27ல், 57 வயது துப்புரவு ஆய்வாளர், சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை, 41வது வார்டுக்கும், 50 வயது துப்புரவு ஆய்வாளர், 42வது வார்டுக்கும், கொரோனா தடுப்பு பணிக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டனர். ?அங்கு இருவருக்கும் கடந்த, 13ல் காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர், 15ல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு, ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன. அன்றிரவு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, 16ல் காலை ஓசூர் திரும்பினர். தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர். பரிசோதனையில் முடிவில், நேற்று இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தி, அவர்கள் வசிக்கும், தனியார் லேஅவுட் மற்றும் பாகலூர் ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். துப்புரவு ஆய்வாளர்கள் சென்னையில் பணியாற்றியபோது, கொரோனா தொற்று பாதித்ததால், அவர்களது விபரங்களை, சென்னையில் சேர்க்க, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X