பொது செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் இல்லாமல் சேலத்துக்குள் நுழைந்த 17 பேர் மீது வழக்கு

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

சேலம்: இ - பாஸ் பெறாமல், மருத்துவ பரிசோதனைக்கு உட்படாமல், சேலத்துக்குள் நுழைந்த, 17 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கூறியதாவது: கொரோனா பரவாமல் தடுக்க, வெளிமாநிலம், பிற மாவட்டங்களிலிருந்து, சேலம் மாநகராட்சிக்கு வருவோரை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால், தமிழக அரசின் அனுமதி பெற்று வருவோரை, மாநகர எல்லை பகுதி சோதனைச்சாவடிகளில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தனிமை முகாம்களுக்கு அனுப்பி, மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில், தொற்று இல்லையெனில், மாநகர எல்லைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. இ - பாஸ் இல்லாமல், சோதனையில் சிக்காமல், மாநகருக்குள் வருவோரை கண்டறிய, நான்கு மண்டலங்களில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்டோரை அழைத்துச்சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மே, 29 முதல், அனுமதியின்றி சேலத்துக்குள் நுழைவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதன்படி, சோளம்பள்ளம், சிவதாபுரம், இரண்டாவது அக்ரஹாரம், அங்காளம்மன், முத்துசாமி, சேர்மன் சடகோபன், சத்தியமூர்த்தி, பேச்சியம்மாள், பாண்டுரங்கன் விட்டல், பெருமாள் கோவில் மேடு உள்ளிட்ட தெருக்களைச் சேர்ந்த, 17 பேர் மீது, இதுவரை போலீஸ் மூலம் வழக்குப்பதியப்பட்டுள்ளது. இவர்களில், நான்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால், வெளிமாவட்டங்களிலிருந்து வருவோரின் விபரங்களை, மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X