பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் வந்த விமான பயணிகள் 5 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

ஓமலூர்: விமானம் மூலம், சென்னையிலிருந்து, சேலம் வந்த, ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையிலிருந்து, விமானம் மூலம், 45 பேர், நேற்று முன்தினம் சேலம் வந்தனர். அவர்களுக்கு, விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து, கருப்பூர் தனிமை மையம், தனியார் ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் முடிவு நேற்று தெரியவந்தது. அதில், ஓமலூர் அருகே, பஞ்சுகாளிப்பட்டியைச் சேர்ந்த, 29 வயது ஆண், 23 வயது பெண், ஜலகண்டாபுரம், 59 வயது பெண், ஈரோடு, 29 வயது பெண், சென்னையைச் சேர்ந்த, 28 வயது ஆண் ஆகியோருக்கு, கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், தனிமையில் இருந்த அவர்களை, ஓமலூர் மருத்துவ அலுவலர் ரமணன் தலைமையிலானோர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். நேற்று, சென்னையிலிருந்து சேலம் வந்த, 48 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X