சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மப்பொருள் வெடித்து விவசாயி பலி: சிறுமி உள்பட 3 பேர் படுகாயம்

Added : ஜூன் 18, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: சாலையில் கிடந்த மர்ம எலக்ட்ரானிக் பொருளை, வீட்டுக்கு எடுத்து வந்து இயக்கியபோது, அது வெடித்ததில், விவசாயி பலியானார். அவரது பேத்தி உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே, தும்பல்பட்டி, வெள்ளிமலையார் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி மணி, 50. நேற்று முன்தினம் இரவு, அவரது வீடு அருகே, சாலையில், மர்ம எலக்ட்ரானிக் சாதனம் கிடந்தது. அவர், அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றார். எப்.எம்.,ரேடியோ போல் இருந்ததால், பாட வைக்க முடிவு செய்தார்.நேற்று மதியம், அச்சாதனத்துக்கு மின் இணைப்பு கொடுத்து இயக்கியுள்ளார். அப்போது, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சம்பவ இடத்தில் உடல் சிதறி மணி உயிரிழந்தார். வீட்டின் ஜன்னல், சிமென்ட் அட்டை வேயப்பட்ட மேற்கூரை உடைந்து சிதறியது. அருகில் இருந்த, அவரது பேத்தி சவுரூபியா, 12, அண்ணன் மகன் வசந்தகுமார், 37, உறவினர் நடேசன், 65, ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மூவரும், சீலநாயக்கன்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்தில், எஸ்.பி., தீபா கானிகேர் விசாரித்தார். வெடித்த மர்மப்பொருள் குறித்து, தடயவியல், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், பனமரத்துப்பட்டி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X